நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

சிறுபான்மையினர் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

சிறுபான்மையினர் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். 

 நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 கோடி வீடுகள்  கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பேசுவது எங்கள் சாதனையைப் பற்றி அல்ல; நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனையைப் பற்றி பேசுகிறோம். பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது. 

காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மந்தகரமான வேகத்துடன் நாங்கள் போட்டியிடுவதில்லை. 

பாஜக 10  ஆண்டுகளில் கொடுத்த கேஸ் இணைப்புகளை காங்கிரஸ் கொடுத்திருந்தால் 60 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ரயில்வேத் துறையில் 10 ஆண்டுகளில் பாஜக செய்த வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் செய்துமுடிக்க 80 ஆண்டுகள் தேவைப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், பாஜக நிறைவேற்றிய திட்டங்களை நிறைவேற்ற 3 தலைமுறைகள் ஆகும். 

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம்  சிதறிவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை. காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com