விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சைதை துரைசாமி மகன் வெற்றி மாயம்

இமாச்சல் மாநிலம் சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெற்றியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் விபத்தில் சிக்கியது

Updated On :5 பிப்ரவரி 2024, 4:19 am

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் மாநிலம் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வெற்றியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், சற்று முன் கிடைத்த தகவலில், சைதை துரைசாமி மகன் வெற்றி பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

இமாச்சல் அருகே சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாசலப் பிரதேசத்துக்கு காரில் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இமாசலப் பிரதேசத்தில், கஷங் நாலா என்ற இடத்தில் வெற்றி துரைசாமி உள்பட 3 பேர் சென்ற இன்னோவா கார், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சட்லஜ் ஆற்றில் விழுந்துள்ளது. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரில் சென்ற மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக இமாசலப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயத்துடன் மீட்கப்பட்டவர் கோபிநாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சடலமாக மீட்கப்பட்ட கார் ஓட்டுநர் தஞ்ஜின் என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த வெற்றி துரைசாமி, நண்பருடன் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கியதாகவும் அவரை மட்டும் காணவில்லை என்றும்  கூறப்படுகிறது. அண்மையில் கிடைத்த தகவலில் அவர் பத்திரமாக இருப்பதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.