கலால் கொள்கை: பிப்.17 நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு உத்தரவு!

சட்டவிரோத மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கேஜரிவால் பிப்.17 நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை: பிப்.17 நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு உத்தரவு!

சட்டவிரோத மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கேஜரிவால் பிப்.17 நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை. இதன்பின்னர், அமலாக்கத்துறை தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜரிவால் மீது பிப். 3ல்  புகார் அளித்தது. 

இதையடுத்து, விசாரணை அமைப்பின் மனுவைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவால் பிப்ரவரி 17 அன்று நேரில் ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com