தவறாக மதிப்பெண் கணக்கிட்ட 9,000 ஆசிரியர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதமா?

விடைத்தாள்களில் தவறாக மதிப்பெண் கணக்கிட்டிருந்த 9,000 ஆசிரியர்களிடமிருந்து ரூ.1.5 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதுதான் அது.
nk_3_exam_0302chn_122_8
nk_3_exam_0302chn_122_8


அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்பில் ஒரு தகவல் பகிரப்பட்டிருந்தது. அதாவது, பொதுத் தேர்வு விடைத்தாள்களில் தவறாக மதிப்பெண் கணக்கிட்டிருந்த 9,000 ஆசிரியர்களிடமிருந்து ரூ.1.5 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதுதான் அது.

காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்வி ஒன்றுக்கு, மாநில கல்வித் துறை அமைச்சர் குபெர் தின்டோர் அளித்த பதில் மூலமாகத்தான் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.

அதாவது, பத்தாம் வகுப்பு விடைத்தாள்களில் 3,350 ஆசிரியர்களும், 12ஆம் வகுப்பு விடைத்தாள்களில் 5,868 ஆசிரியர்களம் மதிப்பெண்களை கூட்டி தவறாகக் கணக்கிட்டிருப்பதாக இது கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ள.

இந்த ஆசிரியர்களிடமிருந்து அரசு ரூ.1.54 கோடி அளவுக்கு அபராதம் விதித்துள்ளது. இதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு ஆசிரியருக்கு ரூ.1600 ஐ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், இன்னும் ரூ.53.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்படவில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஆசிரியர்களிடமிருந்து அபராதத்தை வசூலிக்க கல்வித்துறை நடவடிக்கையும் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுளள்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com