தெற்கில் 27 இடங்களை கைப்பற்றும் பாஜக: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தென் மாநிலங்களில் மட்டும் 27 இடங்களைக் கைப்பற்றலாம் என்று டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தென் மாநிலங்களில் மட்டும் 27 இடங்களைக் கைப்பற்றலாம் என்று டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மேட்ரிஸ் நியூஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், தெலங்கானா மற்றும் தமிழகத்திலும் பாஜக தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 21 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வென்ற தொகுதிகளைக் காட்டிலும் 4 தொகுதிகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 5 தொகுதிகளையும், ஜனதா தளம் 2 தொகுதிகளையும் வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பாஜகவின் 400 தொகுதிகள் என்ற கணக்குக்கு கர்நாடகம் பேருதவி செய்யலாம் என்றும் தெரிகிறது.  திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் வெல்லும். திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் 36 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அதிமுக மற்றும் இதர கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்தரி மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் கூட்டணி 19 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 6 தொகுதிகளிலும் வெல்லும். இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தோல்வியை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

தெலங்கானாவில் 5 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், பிஆர்எஸ்  கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திரத்திலும் கேரளத்திலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றே கூறப்படுகிறது. இங்கு வெற்றிக் கணக்குகளைத் தொடங்குவதே கஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com