ராகுல் முதலில் தனது கட்சியின் நீதியை நிலைநாட்ட வேண்டும்: சத்தீஸ்கர் முதல்வர்

ராகுல் முதலில் தனது சொந்தக் கட்சித் தலைவர்களை நியாயப்படுத்த வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் விமர்சித்துள்ளார். 
ராகுல் முதலில் தனது கட்சியின் நீதியை நிலைநாட்ட வேண்டும்
ராகுல் முதலில் தனது கட்சியின் நீதியை நிலைநாட்ட வேண்டும்

ராகுல் முதலில் தனது சொந்தக் கட்சித் தலைவர்களை நியாயப்படுத்த வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் விமர்சித்துள்ளார். 

ராகுலின் நடைப்பயணம் ஒடிசாவிலிருந்து சத்தீஸ்கரில் வியாழக்கிழமை நுழைய உள்ளது. நவம்பர் 2023 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, சத்தீஸ்கருக்கு காந்தியின் முதல் பயணம் இதுவாகும். அவரது கட்சி மாநிலத்தில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. 

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20ல் மும்பையில் நிறைவடைகின்றது. 

தில்லியிலிருந்து திரும்பிய பிறகு ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,

சத்தீஸ்கர் மாநில பொதுப்பணித்துறை(சிஜிபிஎஸ்சி) ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றார். 

ராகுலின் பயணம் குறித்த கேள்விக்கு, பாரத் ஜோடா யாத்திரையின் தாக்கத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள், இப்போது அவர் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சத்தீஸ்கரில் பல காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். எனவே, முதலில் அவர்கள் கட்சியின் நீதியை நிலைநாட்ட வேண்டும். 

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விவாதம் பற்றிக் கேட்டதற்கு... பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர் ஓம் மாத்தூர் மற்றும் இணைப் பொறுப்பாளர் நிதின் நபின் ஆகியோருடன் தேர்தல் குறித்த விவாதம் நடைபெறும் என்றும், தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் சாய் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com