ராஜஸ்தானில் முதல்முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள் 15 லட்சத்துக்கும் அதிகம்! 

ராஜஸ்தானில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பார்கள்
ராஜஸ்தானில் முதல்முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள் 15 லட்சத்துக்கும் அதிகம்! 


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பார்கள் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலில் ராஜஸ்தானில் 32 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2,74,75,971 ஆண் வாக்காளர்கள், 2,53,51,276 பெண் வாக்களர்கள், மூன்றாம் பாலினத்தவர் 616 பேர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 6 லட்சம் பேர்  என குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மாநிலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 72 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் எண்ணிக்கை தற்போது முறையே 5,72,965 மற்றும் 12,85,960 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு 18-19 வயதுக்குட்பட்ட 15,54,604 புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று குப்தா தெரிவித்தார்.

ராஜஸ்தானில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை குப்தா வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com