ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டையால் நாடே ஆபத்தில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள இடம் குறித்து காங்கிரஸ் எம்.பி. பேசியுள்ளார்.
பிரமோத் திவாரி
பிரமோத் திவாரி
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் உண்மையான ராமஜன்மபூமிக்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ளதாகவும் இது குறித்து ஆய்வு செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட பிரமோத், ஹிந்து மரபுகளின்படி மூலவர் பிரதிஷ்டை நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ராமஜன்ம பூமி எங்குள்ளது என்பதற்கான ஆதராத்தை அவர் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கோயில் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பு பிரதிஷ்டை நடந்ததால் நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் இதுதான் எனவும் அதனாலேயே தில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ராமரைத் தேர்தல் வாக்களிக்கும் பெட்டியில் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார் பிரமோத் திவாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com