

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிதுன் சக்கரவர்த்தி இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகராக இருந்து பாஜக தலைவராக மாறிய 76 வயதாகும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இன்று காலை நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான "மிரிகயா" என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார்.
நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கடந்த மாதம் குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.