இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி

இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், கரோனா காலத்திலும் நம் நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை. உலகையே அச்சுறுத்திய கரோனா பெருந்தொற்றை நாம் பெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக கடந்த 5 ஆண்டுகளில் நாடு இருந்துள்ளது. 

நடப்பு 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கிடைத்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.  ஜி20 மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா. 100 சதவீதம் முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்ற உறுதி ஏற்போம். 

17வது மக்களவை 97சதவீதம் செயல்பட்டது. இதனை 100 சதவீதமாக செயல்படுத்த வேண்டும். ஒரு தேசத்திற்கு இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட்டுள்ளது. நமது கலாசார பெருமைகளின் மரபாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.  முத்தலாக் சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய சட்டங்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com