உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பக்தி மற்றும் சக்தி இரண்டின் சங்கமமே ராமர் கோயில் அமைய காரணம் எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் பேசிய யோகி, 500 ஆண்டுகால அடிமை முறையை அயோத்தி கோயில் கட்டுமானம் முறியடித்ததாக குறிப்பிட்டார்.
அவர், “பக்தி மற்றும் சக்தியில் சங்கமமே ராமர் கோயில் கட்டுமானத்துக்கு வழிவகுத்து 500 ஆண்டுகால அடிமை முறையை தகர்த்தது. மகத்துவமான அந்த தருணத்தைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இந்த சக்தி, பக்தியால் உருவாவது. சாமர்த் ராம்தாஸ், மாவீரர் சிவாஜியை உருவாக்கினார். சிவாஜி முகாலய அரசர் ஒளரங்கசீப்புக்கு சவாலாக விளங்கினார், அவர் துன்புற்று இறந்து போனார், யாரும் முகலாய மன்னரைப் பொருட்படுத்துவதில்லை” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா வீரம் மிகுந்த மாநிலமாக இருப்பதற்கு காரணம், துறவிகள் வாழ்ந்த இடமாக இருப்பதால்தான் என உத்தர பிரதேச முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நாட்டின் ஆயுத படை, தேசத்தின் சுய சார்பு (ஆத்மநிர்பார்) நிலைக்கு கொண்டு செல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.