ராமர் கோயில் விழாவில் ஒரு எளிய மனிதரையாவது பார்க்க முடிந்ததா? : ராகுல் கேள்வி

ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு எளிய மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் ராகுல் காந்தி
சத்தீஸ்கரில் ராகுல் காந்திPTI

பாஜக ஆட்சியில் நாட்டின் மக்கள் வேலையின்மையையும் பணவீக்கத்தின் சீற்றத்தையும் எதிர்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்தில் பாரத ஜோடா யாத்திரையில் மக்களிடையே பேசிய ராகுல் காந்தி மக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய வகுப்பினர், தலித் மற்றும் ஆதிவாதி ஆகியோர் 74 சதவிகித மக்கள் நாடு முழுவதும் உள்ள நிலையில் இவர்கள்ஒருவர் கூட இந்தியாவின் முதன்மை 200 நிறுவனங்களில் தலைவராகவோ நிர்வாகத்திலோ கூட ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கரில் ராகுல் காந்தி
சத்தீஸ்கரில் ராகுல் காந்திPTI

ஹிந்து ராஜ்யம் என பாஜக பிரகடனப்படுத்துவதாகவும் ஆனால் 74 சதவிகித மக்கள்தொகை வறுமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள், தட்டில் மணி அடிக்கவும் அலைபேசி காட்டவும் தூக்கில் தொங்கவுமே உள்ளனர் என அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அயோத்தி கோயில் விழாவில் ஏழையோ, தொழிலாளியோ அல்லது சிறிய முதலாளியோ கண்ணில் தென்பட்டனரா? அதானி ஜி, அம்பானி ஜி, அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் பச்சான், மற்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆகியோர் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அதானி, அம்பானி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரிய அறிக்கைகள் கொடுத்தனர் எனவும் தெரிவித்தார்.

சீன பொருள்களை விற்று அவர்கள் லாபம் பார்க்கும்போது மக்கள் வேலையின்மையையும் பணவீக்க சீற்றத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை பொருளாதார அநீதி என ராகுல் குறிப்பிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com