மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோன் சவாண் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மும்பையில் நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார் அசோக் சவாண். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அசோக் சவான் நேற்று அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இன்று (பிப். 13) இணைந்தார்.
முன்னதாக கட்சியில் இணைவதற்காக பாஜகவின் மும்பை தலைமை அலுவலகத்திற்கு வந்த அசோக் சவாணுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










