தேர்தல் நன்கொடை பத்திரம் வாங்க மறுத்த ஒரே கட்சி..!

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்க மறுத்த கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரம் வாங்க மறுத்த ஒரே கட்சி..!
DOTCOM

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்க மறுத்த கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தோ்தல் நன்கொடைகளை வங்கிப் பத்திரங்களாக அரசியல் கட்சிகள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்தது; தொடா்ந்து இந்த நடைமுறையை ரத்து செய்து உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்தாலும், அவர்களும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டவர்களே.

தேர்தல் நன்கொடை பத்திரம் வாங்க மறுத்த ஒரே கட்சி..!
‘தேர்தல் பத்திரம் என்பது லஞ்சம்’: அன்றே சொன்ன ராகுல்!

2018 முதல் 2023 வரையிலான அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில், பாஜக ரூ. 6,566.11 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ. 1,123.3 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ. 1,092.98 கோடியும் பெற்றுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

இந்தப் பட்டியலில் திமுக(ரூ. 616.5 கோடி), அதிமுக (ரூ. 6.05 கோடி) உள்ளிட்ட கட்சிகளும் அடங்கும்.

ஆனால், தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்த போதே இந்த திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய மனுதாரர்களுள் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை ஒரு ரூபாய்கூட தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெறவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் இதனைக் குறிப்பிட்டு, ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டும் தேர்தல் பத்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நன்கொடை பெறவில்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

தேர்தல் நன்கொடை பத்திரம் வாங்க மறுத்த ஒரே கட்சி..!
தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து விவரங்களை வெளியிட கெடு; உச்சநீதிமன்றம் தீா்ப்பு

இந்த தீர்ப்பு குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, “ஆளும் கட்சிக்கு பெரு நிறுவனங்கள் அளிக்கும் அதீத நிதி இந்த தீர்ப்பின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்கொடை பத்திரங்கள் சட்டப்பூர்வ ஊழல் என்பதால் எங்கள் கட்சி மட்டும்தான் ஏற்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com