ஒடிஸாவில் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை; குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்!

ஒடிஸா மாநிலத்தில் உடல் உறுப்பு செய்பவர்களின் சடலத்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.
ஒடிஸாவில் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை; குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்!

ஒடிஸா மாநிலத்தில் உடல் உறுப்பு செய்பவர்களின் இறுதி சடங்கில் முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மேலும், இறுதிச் சடங்குக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசே செய்து, சடலத்தின் மேல் மூவர்ணக் கொடி வைத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், “மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்பை தானம் செய்ய முன்வரும் குடும்பத்தினரின் தைரியம் மற்றும் தியாகத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது” என்றார்.

ஏற்கெனவே ஒடிஸா அரசு உடல் தானம் மாற்று அமைப்பை நிறுவி, கடந்த 2020 முதல் உடல் தானம் செய்பவர்களுக்கு சூரஜ் விருதை வழங்கி வருகின்றது.

ஒடிஸாவை சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகளை அவரது குடும்ப உறுப்பினர்கள் தானம் செய்ய முன்வந்ததால் 6 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

முன்னதாக, கடந்தாண்டு உடல் உறுப்பு செய்பவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com