வாராணசியில் ராகுல்: மக்கள் உற்சாக வரவேற்பு!

உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் நடைப்பயணம் இரண்டாவது நாளான இன்று வாராணசியில் நுழைந்துள்ளது.
வாராணசியில் ராகுல்
வாராணசியில் ராகுல்

உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் நடைப்பயணம் இரண்டாவது நாளான இன்று வாராணசியில் நுழைந்துள்ளது.

பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் 2வது நாள் நடைப்பயணம் தொடங்கியுள்ளது. ராகுல் மாநிலத் தலைவர் அஜய் ராய் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன், ஜீப்பில் நின்றவாறு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

வாராணசியில் ராகுல்
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

பிறகு வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். வாராணசியில் நடைபெறும் நடைப்பயணத்தில் அப்னா தளம் (காமராவாடி) தலைவர் பல்லவி படேல் மற்றும் சிரத்துவின் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏவும் இணைந்தனர்.

வெள்ளிக்கிழமையன்று நடைப்பயணம் பிகாரின் சந்துவாலியில் நுழைந்தது, அங்கு இரவு நிறுத்தப்பட்டது.

ரேபரேலியில் நடைபெறும் நடைப்பயணத்தில் தானும் கலந்து கொள்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த நடைப்பயணம் உத்தரப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானுக்குள் நுழைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com