தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006-ன்படி "ரோடமைன் பி" எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப் பொருள்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களைப் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்தனர்.

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!
ப(ந)ஞ்சு மிட்டாய், ஜாக்கிரதை!

பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" என்ற ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்?

எனவே, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தமிழகரசு தடை விதித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ள நிலையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com