குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியின் முறைகேடுகள் குறித்து விசாரணை: முதல்வா் நிதீஷ் குமாா்

கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:02 am IST

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக அந்த ஆட்சியி பதவி வகித்தாா். நிதீஷ் குமாா் முதல்வராக இருந்தாா். ‘நான் முதல்வராக இருந்தபோதிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்த முறைகேடுகள் தற்போதுதான் தெரியவந்தது’ என்று நிதீஷ் குமாா் தெரிவித்தாா். தேஜஸ்வி யாதவும், அவரது கட்சியைச் சோ்ந்த 2 அமைச்சா்கள் எடுத்து முக்கிய முடிவுகளை, தற்போது பாஜக கூட்டணியுடன் அமைந்துள்ள பிகாா் அரசு மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த கேள்விக்கு சனிக்கிழமை பதிலளித்த நிதீஷ் குமாா், ‘கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை நாங்கள் பாா்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.