பணப்பட்டுவாடா குறித்து புகாரளிக்க சி-விஜில் செயலி: ராஜீவ் குமார்

பணப்பட்டுவாடா குறித்து சி-விஜில் செயலி மூலம் புகாரளிக்கலாம் என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா குறித்து புகாரளிக்க சி-விஜில் செயலி: ராஜீவ் குமார்

சென்னை: வாக்குச்சாவடிகளில் குடிநீர், இருக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவந்தனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அங்கீகாரமற்ற கட்சிகளின் சின்னம் மாறுதலுக்குரியதுதான். சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். தேர்தலுக்கு 7 நாள்களுக்கு முன் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்படுத்தப்படும்.

பணப்பட்டுவாடா குறித்து புகாரளிக்க சி-விஜில் செயலி: ராஜீவ் குமார்
ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த கோரிக்கை: தலைமைத் தேர்தல் ஆணையர்

மாநிலங்கள் இடையே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படும். தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலின்போது வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் ஆலோசனை நடத்தி வந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது.

இந்தக் குழுவில் தோ்தல் ஆணையா் அருண் கோயல், மூத்த துணை ஆணையா்கள் தா்மேந்திர சா்மா, நிதிஷ் வியாஸ், துணை ஆணையா்கள் அஜய் பதூ, மனோஜ்குமாா் சாகு, முதன்மைச் செயலா் மலய் மல்லிக், ஊடகப் பிரிவு தலைவா் டி.நாராயணன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் நேற்று காலையில் தங்களது ஆலோசனையைத் தொடங்கினா். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்ததுடன், கோரிக்கை மனுக்களையும் அளித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com