உ.பி.யில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி

உ.பி.யில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி

உத்திர பிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் 7 சிறுவர்கள் உள்பட 15 பேர் பலியாகினர்.

உத்திர பிரதேச மாநிலம், கஸ் கஞ்ச் பகுதியில் மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று காலை டிராக்டரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மீது மோதல் இருக்க டிராக்டர் டிராக்டர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உள்பட 15 பேர் பலியாகினர்.

அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com