
தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதரணி, புது தில்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜகவில் விஜயதரணி இணையவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சி அதனை மறுத்து வந்தது.
இந்த நிலையில் புது தில்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில், விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.
பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் அவரது தலைமையை ஏற்று பாஜகவை மேலும் வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜயதரணி கூறியுள்ளார்.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியான விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப் போகிறார் என்பதாகத் தகவல்கள் பரவிவந்தன. காங்கிரஸ் தரப்பில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் விஜயதரணி தரப்பிலிருந்து எவ்வித மறுப்பும் வராத நிலையில், இன்று அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.