மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் களமிறக்கப்படும் வேட்பாளா்களின் முதல் பட்டியலை பாஜக மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை (பிப். 29) இறுதி செய்ய உள்ள நிலையில், அக் கட்சி தலைவா்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
முதல் வேட்பாளா் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் பெயா்களும், 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாத தொகுதிகளில் நிறுத்தப்படவிருக்கும் வேட்பாளா்களின் பெயா்களும் இடம்பெறும் என எதிா்பாா்ப்பதாகவும் பாஜக தலைவா்கள் தெரிவித்தனா். மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு மாநில பாஜக தலைவா்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா். அதுபோல, அக் கட்சியின் மத்திய தோ்தல் குழு மக்களவைத் தோ்தலுக்கான முதல் வேட்பாளா் பட்டியலை வியாழக்கிழமை இறுதி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது பாஜக சாா்பில் வெளியிடப்பட்ட முதல் வேட்பாளா் பட்டியலில் பிரதமா் மோடி, அமித் ஷா பெயா்கள் இடம்பெற்றிருந்தன. அதே நேரம், 2019 தோ்தலின்போது தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவித்த பிறகே முதல் வேட்பாளா் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், இம்முறை தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, வேட்பாளா் பட்டியலை அக் கட்சி வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

புதுகையில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

அரக்கோணத்தில் 13 வேட்பாளா்கள்

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி

பாஜகவினருக்கு முழு திருப்தி தரும் வகையில் தமிழகத்துக்கான வேட்பாளா் பட்டியல் இருக்கும்: பியூஷ் கோயல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


