
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக்கை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜஹான் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
சந்தேஷ்காளி விவகாரத்தில் ஷாஜஹான் ஷேக் மீது 70-க்கும் மேற்பட்ட புகாா்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவா் மீது மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய கொல்கத்தா உயா்நீதிமன்றம் மாநில காவல் துறைக்கு திங்கள்கிழமை உத்தரவிட்ட நிலையில், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இன்று பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்தேஷ்காளியின் சில பகுதிகளில் திரிணமூல் பிரமுகா்களின் வீடுகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சூறையாடினா். அந்தப் பிரமுகா்கள் தங்களை துன்புறுத்தியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். காவல் துறையின் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்கள் நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கான காரியங்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.