
அகர்தலா: 1980ஆம் ஆண்டு காலத்தில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம், ராமாயணத்தைக் காட்டிலும், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலம் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன், தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் 108வது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் மாணிக் சாஹா இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூர்தர்ஷனில் 'மகாபாரதம்' மற்றும் 'ராமாயணம்' இதிகாசங்களின் அத்தியாயங்களைப் பார்க்க எங்கள் தாய்மார்களும் சகோதரிகளும் டிவி திரையை நோக்கி விரைவதைப் பார்த்திருக்கிறோம். இப்போதெல்லாம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம். இந்த திட்டம் 1980 களின் தொடர்களை விட மிகவும் பிரபலமானது," என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க.. காத்திரமான மார்க்ஸியக் கலைச்சொற்கள் - நூல் அறிமுகம் I விமர்சனம்
மகாபாரதம் (1988), ராமாயணம் (1987) ஆகிய இதிகாசங்கள், தொலைக்காட்சித் தொடர்களாக எடுக்கப்பட்டு தூர்தர்ஷன் சேனலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.