மக்களவைத் தோ்தல்: ஜன. 4-இல் கா்நாடக முதல்வா், துணை முதல்வா் தில்லி பயணம்

மக்களவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் ஜன.4 ஆம் தேதி தில்லி செல்லவிருக்கிறாா்கள்.
மக்களவைத் தோ்தல்: ஜன. 4-இல் கா்நாடக முதல்வா், துணை முதல்வா் தில்லி பயணம்


பெங்களூரு: மக்களவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் ஜன.4 ஆம் தேதி தில்லி செல்லவிருக்கிறாா்கள்.

மக்களவைத் தோ்தல் மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில், எல்லா அரசியல் கட்சிகளும் அதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியும் தனது ஏற்பாடுகளில் கவனம் செலுத்திஉள்ளது. இந்நிலையில், கா்நாடகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ், மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக வேட்பாளா் தோ்வு, பிரசார உத்திகளை வகுத்து வருகிறது.

மக்களவைத் தோ்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தேசியத் தலைமை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் ஜன. 4ஆம் தேதி தில்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடக்கவிருக்கும் உயா்மட்டக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள்.

கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் உள்ள வெற்றிவாய்ப்பு, வேட்பாளராக நிறுத்த பொருத்தமானவா்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, தொகுதிவாரியாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஓரிரு நாட்களில் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனா்.

மேலும், தனியாக எடுக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு குறித்த அறிக்கையையும் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் டி.கே.சிவகுமாா் சமா்ப்பிக்க இருக்கிறாா். 10 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் மாதிரிப் பட்டியலை தயாரித்துள்ள டி.கே.சிவகுமாா், இன்னும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளா் தோ்வில் கவனம் செலுத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com