ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கரோனா!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கரோனாவான ஜெஎன்.1 பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கரோனா!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கரோனாவான ஜெஎன்.1 பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ஜெஎன்.1 தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஒடிசாவின் சுந்தர்கர் மற்றும் புவனேஸ்வரில் புதிய வகை கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குனர் விஜய்குமார் கூறியுள்ளார். 

கரோனா பாதித்த 28 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் இருவர் ஜெ.என்.1 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

சுந்தர்கரைச் சேர்ந்தவர் வீட்டில் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொருவர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதிதாக பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து நாட்டில் 25 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளம், கர்நாடகம் என தலா ஒருவர் கரோனோவுக்கு பலியாகியுள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,423-ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com