ஜோதிராதித்ய சிந்தியாவுடன் ஹிமாசல் முதல்வர் சந்திப்பு! 

புது தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 
ஜோதிராதித்ய சிந்தியாவுடன் ஹிமாசல் முதல்வர் சந்திப்பு
ஜோதிராதித்ய சிந்தியாவுடன் ஹிமாசல் முதல்வர் சந்திப்பு

புது தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 

காங்ரா விமான நிலைய விரிவாக்கம் குறித்து அவர் விவாதித்தார். மாவட்ட தலைமையகம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் விமான இறங்குதளம் அமைக்க மாநில அரசு உத்தேசித்துள்ளதாகவும், மாநிலத்தில் 9 இறங்கு தளங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு சிந்தியாவை வலியுறுத்தியதாகவும் முதல்வர் கூறினார். 

விரிவாக்கத் திட்டத்தின் படி, பெரிய விமானங்களின் இயக்கத்திற்காக விமான நிலையத்தில் ஓடுபாதை 1,376 மீட்டரிலிருந்து 3,010 மீட்டராக விரிவுபடுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதற்கான இழப்பீட்டுத் தொகையைத் தவிர்த்து, திட்டச் செலவுக்கு ரூ.10,995.69 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் சுகு வலியுறுத்தினார்,

தற்போது, ​​சிம்லாவிற்கு 3 விமானங்களும், தர்மசாலாவிற்கு 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன. குலு மணாலிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி குலுவிற்கு ஒரு விமானம் மட்டுமே போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கு சிந்தியா கூறியது, ரக்காட், பாலம்பூர், சம்பா மற்றும் ரெக்காங் பியோ ஆகிய இடங்களில் நான்கு இறங்குதளங்கள் 'உடான்' திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவதாக முதல்வரிடம் கூறினார்.

மேலும், சஞ்சௌலி இறங்குதளம் செயல்படுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார், மேலும் மாநிலத்திற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் அளிக்க உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com