
தில்லியில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு மகளிர் ஆணையத் தலைவரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஆம் ஆத்மி தேர்வு செய்துள்ளது.
தில்லியைச் சேர்ந்த மூன்று மாநிலங்களவை எம்.பி.க்களின் ஆறு ஆண்டு பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா மற்றும் நரேன் தாஸ் குப்தா ஆகிய மூவரும் ஜனவரி 27ல் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, சஞ்சய் சிங், குப்தா ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். அதேசமயம் சுஷில் குமார் குப்தா ஹரியாணாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். எனவே அவருக்குப் பதிலாக தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலை மற்றொரு வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.