விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜார்க்கண்ட்: கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்பு

ஜார்க்கண்டில் கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. 

News image

கோப்புப் படம்.

Updated On :5 ஜனவரி 2024, 4:14 pm

ஜார்க்கண்டில் கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. 

ஜார்க்கண்ட் மாநிலம், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் கூட்டத்துடன் கடந்து சென்ற யானைகளில் ஒன்று புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள 25 முதல் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு சற்று தொலைவில் இருந்து சாய்வுதளமாக குழி தோண்டினர். பின்னர் கிராம மக்களின் உதவியுடன், கயிறு மூலம் யானையை சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யானையை காப்பாற்ற முடியவில்லை என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்த யானையின் வயது 25 முதல் 30ஆக இருக்கலாம் என்றும் யானை இறந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சனிக்கிழமை உடற்கூராய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த கிணறு பாசனத்திற்காக தோண்டப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

வனத்துறையினர், உரிய நேரத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்காததே யானை இறப்பிற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.