சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் உத்தரப் பிரதேசம்!

கடந்த ஆண்டில் முதல் 9 மாதத்தில் 32 கோடி சுற்றுலா பயணிகளைக் கண்டுள்ளது உத்தரப்பிரதேச மாநிலம். 
சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் உத்தரப் பிரதேசம்!
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 32 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரப் பிரதேசத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

31,91,95,206 உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் 9,54,866 சர்வதேச சுற்றுலாப்பயணிகளும் கடந்த ஆண்டு முதல் ஒன்பது மாதத்தில் வந்துசென்றுள்ளனர். 

காசி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்த போதிலும் பிரயக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களும் கோடிக்கணக்கான சுற்றுல்லாப் பயணிகளைக் கண்டுள்ளன. 

கடந்த 2022-ல் 31.85 கோடி சுற்றுலாப் பயணிகளை கண்டிருந்த உத்திரப்பிரதேசம் 2023-ல் 32 கோடி பேரை ஈர்த்துள்ளது.

மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்களில் உயர் இடங்களைப் பிடித்திருக்கும் உத்தரப் பிரதேசம் சுற்றுலாத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 

அதிக சுற்றுலா பயணிகளைக் கண்ட இடங்களில் காசி முதல் இடத்திலும், பிரயாக்ராஜ் இரண்டாமிடத்திலும் அயோத்தி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ராமர் கோயில் திறப்பிற்குப்பின் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளைக் காணவிருக்கும் அயோத்திக்கு கடந்த வருடம் 2,03,64,347 சுற்றுலா பயணிகள் வந்துசென்றுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com