'மனைவி வடமாநிலத்தவரா?': சர்ச்சை கிளப்பும் விளம்பரம்!

கர்நாடகத்தில் ரசம் பேஸ்ட் நிறுவனம் ஒன்று 'மனைவி வடமாநிலத்தவரா?' என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்திருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 
இணையத்தில் பகிரப்பட்ட விளம்பரத்தின் புகைப்படம் | X
இணையத்தில் பகிரப்பட்ட விளம்பரத்தின் புகைப்படம் | X
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் ரசம் தயாரிக்கும் பேஸ்ட் (Rasam paste) விளம்பரம் வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மனைவி வடமாநிலத்தவரா? சில நொடிகளில் ரசம் தயார்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ள விளம்பரத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

தனிநபர் ஒருவரால் எக்ஸ் தளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டது. அதில் அவர் 'வடமாநில மற்றும் தென்மாநிலத்தவர்களை அவமதித்து எப்படி ஒரு விளம்பரத்தை எடுத்துள்ளார்கள்' எனப் பதிவிட்டுள்ளார். 

இது வட மாநிலத்தவரை அவமதிப்பது போல் உள்ளது என ஒரு தரப்பு விவாதிக்க, மற்றொரு தரப்பு 'இதிலென்ன தவறுள்ளது விளம்பரம்தானே, எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்' என்கிறது.

'பெண்கள் மட்டும்தான் சமைக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்' என்ற கருத்தும் கமெண்ட்களில் காணலாம். 'எல்லாவற்றிற்கும் புண்படாமல் வாழ்கையை எளிமையாக எடுத்துக்கொண்டு வேலையைப் பாருங்கள். எனக்கு இந்த விளம்பரம் சிரிப்பூட்டும் வகையில் உள்ளது. நான் இந்திரா ரசம் பேஸ்ட் கண்டிப்பாக வாங்குவேன்' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.  

இந்த சர்ச்சையால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது இந்திரா ரசம் பேஸ்ட்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com