மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பஞ்சாப் அணிவகுப்பு மாநிலம் முழுவதும் வலம்வரும்: பகவந்த் மான் அறிவிப்பு!

மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் அணிவகுப்பானது மாநிலம் முழுவதும் வலம்வரும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பகவந்த் மான் சிங் (கோப்புப்படம்)
பகவந்த் மான் சிங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் அணிவகுப்பானது மாநிலம் முழுவதும் வலம்வரும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது.

பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கியில் புதிதாக தேர்வானவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் பகவந்த் மான் சிங் அக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, “பகத் சிங், உத்தம் சிங் மற்றும் லாலா லஜபதி ராய் போன்றவர்களின் பங்களிப்பை எடுத்துக்கூறும் விதத்திலான பஞ்சாபின் அட்டவணை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

தேசியத் தலைவர்களை இவ்வாறு அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. மகத்தான தியாகிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ் தேவையில்லை. 

பாஜக தலைமையிலான மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் மாநிலத்தின் அணிவகுப்பானது மாநிலம் முழுவதும் வலம் வரும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது. இந்த மூன்றுமே எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com