ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர்!

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சி என்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப்படம்)
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப்படம்)

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சி என்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் இன்று (புதன்கிழமை) தனது முடிவை அறிவித்தார். 

ராகுல் நர்வேகர் கூறியதாவது, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, யார் உண்மையான அரசியல் கட்சி என்பதை தீர்மானித்துள்ளேன். எந்த அணியினர் உண்மையான அரசியல் கட்சி என்பது சட்டப்பேரவை பெரும்பான்மையை வைத்து முடிவு செய்யப்படும். அந்தவகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சட்டப்பேரவை பெரும்பான்மை உள்ளது. 

ஆகவே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சியாகும். ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது." என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவையடுத்து சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com