2028ல் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்: நிர்மலா சீதாராமன்!

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குஜராத்தில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாட்டில் புதன்கிழமை பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, “தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியைத் தொடர்ந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இப்போது இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 

கடந்த 9 ஆண்டுகளில் 595 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈர்த்துள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலவுவதால் அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2027-28 ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜிடிபியுடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. 

மேலும், 2047 ஆம் ஆண்டில் நாம் 30 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக வளர்ந்திருப்போம்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com