ஜன.10-ல் ஹிந்தி நாள் கொண்டாடப்படுவது ஏன்?

உலகம் முழுவதும் இன்று (ஜன. 10) ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காண்போம். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகம் முழுவதும் இன்று (ஜன. 10) ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காண்போம். 

வெளிநாடுகளில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 10ஆம் தேதி ஹிந்தி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

8 ஆண்டுகளுக்கு முன்பு, 2016ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நாக்பூரில் ஹிந்தி மொழிக்கான மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஹிந்தி மொழியை உலக அரங்கில் கொண்டுசெல்லும் நோக்கத்தில் ஹிந்தி நாள் கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதனால், மாநாடு நடைபெற்ற ஜன. 10ஆம் தேதியே ஆண்டுதோறும் ஹிந்தி நாளாக அனுசரிக்கப்படுகிறது.    

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இந்தியாவைச்  சேர்ந்த அமைப்புகள் உள்ளிட்டவையும் ஜன.10ம் தேதியை உலக ஹிந்தி நாளாக கடைப்பிடிக்கிறது.

உலக ஹிந்தி நாளையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் சுவாமி விவேகானந்தா கலாசார மையம் சார்பில் 2 நாள்கள் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com