சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கட்டி முடிக்காத ராமர் கோயிலுக்கு ஏன் திறப்புவிழா?, தலைமை அர்ச்சகர் பதில்!

கட்டி முடிக்காத ராமர் கோயிலுக்கு இப்போது ஏன் திறப்புவிழா என காங்கிரஸும், நான்கு சங்கராச்சாரியார்களும் கேள்வியெழுப்பியுள்ள நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகர் பதிலளித்துள்ளார். 

News image

அயோத்தியில் உள்ள ராமர் கோயில்.

Updated On :13 ஜனவரி 2024, 9:39 am

DIN

அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான அழைப்பை ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய நான்கு பீடங்களின் தலைமைகளும் நிராகரித்துள்ளனர். முழுதாகக் கட்டி முடிக்காத கோயிலுக்கு எப்படி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடத்த முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பினர். அரசியல் பலன்களுக்காக கட்டி முடிக்காத கோயிலை தேர்தல் நேரத்தில் திறப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டினர். மேலும் கோயில் நிகழ்ச்சி முழுக்க முழுக்க வேதத்தின் வழிகாட்டுதலின்படி மட்டுமே நடக்க வேண்டும் என சங்கராச்சாரியார்கள் வழியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து பேசிய ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், 'காங்கிரஸ் கட்சியினர் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதற்கு சாக்கு சொல்லிகொண்டிருக்கிறார்கள்' எனக் கூறியுள்ளார். 

மேலும், அனைத்தும் வேதங்களின்படியே நடந்துவருகின்றன. திறப்பு விழாவிற்குத் தேவையான அனைத்தும் கோயிலுக்குள் தயாராக உள்ளன. கோயில் இன்னும் முழுதாகக் கட்டிமுடிக்கப்படவில்லை எனக் கூறுவது தவறு' எனத் தெரிவித்துள்ளார். 

நான்கு சங்கராச்சாரியார்களும் அழைப்பைப் புறக்கணித்தது குறித்து பேசும்போது, 'அவர்களின் எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்து கேள்வி எழுப்ப முடியாது' எனத் தெரிவித்துள்ளனர்.  

ஜனவரி 22 நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்புவிழாவில் காங்கிரஸ் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இந்த நிகழ்வுக்கான அழைப்பை நிராகரித்துள்ளார். மதத்தின் மூலம் பாஜக அரசியல் லாபங்களை ஈட்ட முயல்கிறது என இரு கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.