ராமர் சிலை பிரதிஷ்டையை குடியரசுத் தலைவர் முர்மு செய்ய வேண்டும்: உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடத்த வேண்டும் என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடத்த வேண்டும் என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலுக்கு வருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி, தனது கட்சித் தலைவர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க காலாராம் கோயிலுக்குச் சென்று கோதாவரி நதிக்கரையில் மகா ஆரத்தி நடத்தப் போவதாக அவர் அறிவித்தார்.

குஜராத்தில் சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டபோது, நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அந்த விழாவிற்கு தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அயோத்தி ராமர் கோயில் நாட்டின் பெருமை என்பதால், கும்பாபிஷேக விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடத்த வேண்டும்.” என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் ராம் லால் மற்றும் ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.

உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மும்பை பாஜக தலைவர் ஆஷிஸ், “உத்தவ் தாக்கரே சஞ்சய் ரௌத் எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முன் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்த விஎச்பி-யின் பதிவை அவர் படிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com