பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும்: ராஜ்நாத் சிங்

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Published on
Updated on
1 min read

லக்னோ: நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று உத்தரகண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம். 

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப் போகிறது என்றால், அது உத்தரகண்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் இடையேயான உறவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உத்தரபிரதேசத்திலிருந்து உத்தரகண்ட் பிரிக்கப்பட்ட பிறகு, இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவில் சில காலம் கசப்பு இருந்தது. ஆனால் அது மக்கள் மத்தியில் ஒருபோதும் காணப்படவில்லை.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்சினைகள் நடக்கவில்லை என்றார்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் இடையேயான உறவு மிகவும் உயிரோட்டமாக உள்ளது. நிலுவையில் அனைத்து பிரச்சினைகளும் இருந்தபோதிலும், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்ற போதிலும் உறவுகள் வலுப்பெற்று வருகின்றது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.