இந்தியா-பாகிஸ்தான் எல்லை: தீவிர கண்காணிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படைகள்! 

குடியரசு நாள், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுவருகின்றனர். 

பிஎஸ்எஃப்-இன் ‘ஆப்ரேஷன் சர்த் ஹவா’ திட்டத்தின் ஓராண்டு நிறைவு அடுத்த வாரம் வரவிருக்கிறது. இந்த வருடம் மேலும் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தலைமை அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரையும் எல்லைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் 10 நாள்களுக்கு முன்பாக எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை ராமர் கோயில் திறப்புவிழா கூடுதலாக இருப்பதால் மேலும் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுவதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com