காதலியைப் போல வேடமிட்டு தேர்வெழுதிய நபரைக் காட்டிக்கொடுத்தது எது?

காதலியைப் போல வேடமிட்டு தேர்வெழுதிய நபரைக் காட்டிக்கொடுத்தது எது?

காதலிக்காக, பெண்ணைப் போல வேடமிட்டு தேர்வெழுதச் சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலிக்காக, பெண்ணைப் போல வேடமிட்டு தேர்வெழுதச் சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சல்வார் கமீஸ் அணிந்துகொண்டு நெற்றியில் பொட்டு, வாயில் உதட்டுச்சாயம் போட்டுக்கொண்டு பரம்ஜித் கௌர், வழக்கமாக தேர்வெழுதுவோருக்கு இருக்கும் பயத்தை விட கூடுதல் பயத்துடன் தேர்வறைக்குச் சென்றார்.

பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவில் உள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற தேர்வின்போது நடந்த சம்பவம் தற்போது ஊடகங்களில் செய்தியாகியிருக்கிறது.

பல்கலைக்கழக ஊழியர்கள், சந்தேகத்தின்பேரில் காவல்நிலையத்தில் முறையிட, வழக்குப் பதிவு செய்யட்டு, தேர்வறைக்குள் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதுதான், பரம்ஜித் கௌர் போல ஆடை அணிந்துகொண்டு தேர்வுக்கு வந்தது அங்ரேஸ் சிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், போலியான ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையையும் அங்ரேஸ் சிங் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் சரியாக செய்திருந்த போதும், பயோ மெட்ரிக்கில், உண்மையான தேர்வர்களின் கைரேகையுடன் தேர்வெழுதுபவரின் கைரேகை ஒத்துப்போகாததால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பரம்ஜித் கௌர் போல இவர் ஏன் சென்றார், ஆள் மாறாட்டம் நடந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

photo courtesy : @cow__momma

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com