மேகாலயாவில் 4 மணி நேரம் சிக்கிக்கொண்ட குடியரசுத் தலைவர்: காரணம்?

மேகாலயாவில் 4 மணி நேரம் சிக்கிக்கொண்ட குடியரசுத் தலைவர்: காரணம்?

மேகாலயாவில் மோசமான வானிலை காரணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர் 4 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
Published on

மேகாலயாவில் மோசமான வானிலை காரணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர் 4 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரண்டு நாள் பயணமாக மேகாலயாவிற்கு வந்துள்ள முர்மு, ஷில்லாங்கில் இருந்து அசாமில் உள்ள திபுவுக்கு காலை 10 மணிக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்தில் விமானம் புறப்பட்ட முடியாமல் 4 மணி நேரம் தாமதமாகி பிற்பகல் 2.35-க்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

திபுவில் கர்பி ஆங்லாங் நிர்வாகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முர்மு கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com