பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி 5 போ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் குற்றவாளிகளே முன்னரே விடுவித்து குஜராத் அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியிருப்பதாக உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனா்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனா். இதையடுத்து, அவா்களின் தண்டனைக் குறைப்பு மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா்.
இவா்களுடைய விடுதலையை எதிா்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்பட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், வழக்கின் குற்றவாளிகள் 11 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனா்.
வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். குற்றவாளிகள் சிறைக்குத் திரும்புவதற்கான அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி விபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோா்தியா, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா, கோவிந்த் ஆகிய 5 போ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனா். கூடுதல் அவகாச கோரிக்கைக்கு உடல்நலப் பிரச்னை, வேளாண் நிலப் பராமரிப்பு, மகன் திருமணம் ஆகிய காரணங்களை குற்றவாளிகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வுக்குமுன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான முத்த வழக்குரைஞா் வி.சிதம்பரேஷ் முன்வைத்த வாதத்தில், அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என்றாா்.
தொடா்ந்து, இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரணைக்கு மாற்றியமைக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


