தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக நாளை (புதன்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான், மாநகர பகுதியில் உள்ள ராஜகோபாலபுரம் ஆகிய இரண்டு இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,
"சென்னை தவிர மற்ற இடங்களில் விஜய்யின் பிரசாரம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய தடைகள் உள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.
நெல்லையில் விஜய் பிரசாரம் செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பரப்புரைக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகிறது.
234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. புதிய மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். திரைத்துறையை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு. வந்திருக்கிறார். விஜய் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை" என்று பேசினார்.
Summary
Strict Conditions Imposed Solely on Vijay Campaign: Sengottaiyan Alleges
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்

விசில் புரட்சி நடக்கும்; 200+ இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொள்ள விஜய் அனுமதித்தார்: கண்கலங்கிய செங்கோட்டையன்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



