ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொள்ள விஜய் அனுமதித்தார்: கண்கலங்கிய செங்கோட்டையன்!

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் பிரசாரம்...

TVK Vijay with sengottaiyan

விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப்படம்

Published On :21 ஏப்ரல் 2026, 4:12 pm IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது சட்டைப்பையில் வைத்துக்கொள்ள தவெக தலைவர் விஜய் அனுமதித்ததாகக் கூறி செங்கோட்டையன் கண்கலங்கினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "வேலூரில் விஜய் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நான் செய்திருந்தேன். அந்த கூட்டம் முடிந்து பேருந்தில் ஏறும்போது விஜய் என்னைப் பார்த்தார். என் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து, மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தார். நானும் சென்றேன். 'நீங்கள் ஒரு சீனியர், நீங்கள் அம்மாவின்(ஜெயலலிதா) படத்தையே வைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார். வேறு யாரும் அப்படிக் கூறமாட்டார்கள்" என்று கண்கலங்கினார்.

முன்னதாக அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Summary

Vijay Granted Permission to Display Jayalalitha photo in shirt pocket: Sengottaiyan Gets Emotional

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.