பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 50 நாட்கள் பரோல்!

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும், பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் (கோப்புப்படம்)
குர்மீத் ராம் ரஹீம் சிங் (கோப்புப்படம்)

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரும், பாலியல் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் 50 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

ஹரியாணாவின் ரோஹ்டக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பிணையில் வந்தார் குர்மீத் ராம். இந்நிலையில் அவருக்கு இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அவரது இந்த பரோல் காலத்தில் உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தேரா சச்சா சௌதா ஆசிரமத்திற்கு குர்மீத் ராம் செல்வார். அவர் தனது பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்முறை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் மூன்று முறை அவர் பரோலில் வெளியே வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், ஜூலை 30, 2023 அன்று மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வந்தார். இதையடுத்து நவம்பர் மாதமும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மூன்று வார கால பரோல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2022 ஜூன் மாதம் ஒரு மாத கால பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து மீண்டும் 2022 அக்டோபரில், அவருக்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டில், தேரா தலைவர் ரஞ்சித் சிங்கைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதற்கான வழக்கிலும் இவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்ததற்கான வழக்கில், 2019ஆம் ஆண்டில் இவரும், இவரது நண்பர்கள் மூன்று பேரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com