மஞ்சள், சிவப்புப் பட்டாடையில் எழுந்தருளினார் ஸ்ரீபால ராமர்!

ராமர் கோயிலில், ஸ்ரீபால ராமர் எழுந்தருளியிருக்கிறார். மஞ்சள், சிவப்பு நிறப் பட்டாடையில் கையில் தங்கத்தாலான வில், அம்புடன்  காட்சியளிக்கிறார்.
மஞ்சள், சிவப்புப் பட்டாடையில் எழுந்தருளினார் ஸ்ரீபால ராமர்!


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், ஸ்ரீபால ராமர் எழுந்தருளியிருக்கிறார். மஞ்சள், சிவப்பு நிறப் பட்டாடையில் கையில் தங்கத்தாலான வில், அம்புடன்  காட்சியளிக்கிறார்.

சிறப்பான அலங்காரத்துடன் வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தங்க நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி பிராண பிரதிஷ்டை விழா சடங்குகள் தொடங்கி நடைபெற்றன.  அயோத்தியல் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு, கண் திறந்துவைக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் தொடங்கிய ஸ்ரீபால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி  தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார்.

பிரதிஷ்டைக்கு முன்பு, புஷ்பம், பழம், மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீபால ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் முற்றம் 81 கலச மூலிகை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது.  பிறகு, பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 கலச புனித நீர் சிலை மீது ஊற்றப்பட்டது. அதன் பிறகு மகாபூஜை நடத்தி உரிய இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக தெய்வீக ஆற்றல், பிராணன் சிலைக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வானது, மந்திரங்கள் ஓதப்படுவதன் மூலமாகவும் முத்திரைகள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com