கேரளத்தில் ராமர் கோயில் பிரச்னை குறித்த ஆவணப்படம் திரையிடல்! 

கேரளத்தில் திரைக்கலை கல்லூரி ஒன்றில் ராம் கி நாம் (Ram ke naam) எனும் ஆவணப்படம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் இன்று திரையிடப்படவுள்ளது
ராம் கி நாம் ஆவணப்படத்தில் ஒரு காட்சி | Youtube
ராம் கி நாம் ஆவணப்படத்தில் ஒரு காட்சி | Youtube

கேரளத்தில் கே ஆர் நாராயணன் தேசிய திரைக்கலை கல்லூரியில் ராம் கி நாம் (Ram ke naam) எனும் ஆவணப்படம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் இன்று திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படம் இஸ்லாமிய மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பட்ட மத மற்றும் அரசியல் ரீதியான பிரச்னைகளைப் பேசுகிறது. 

இயக்குநர் ஆனந்த் பத்வர்தன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம் இன் தி நேம் ஆப் காட் (In The Name Of God) என்ற பெயரிலும் அறியப்படுகிறது. மத ரீதியாக அரங்கேறிய வன்முறைகளைப் பற்றிய இந்த ஆவணப்படத்தை இன்று (ஜன.23) இரவு 7 மணிக்கு கே ஆர் நாராயணன் தேசிய திரைக்கலைக் கல்லூரியில் மாணவர்கள் திரையிடவுள்ளனர். 

கடந்த ஜனவரி 22 ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை அன்று கல்லூரி வாசலில் கல்லூரியின் மாணவர் அமைப்பால் திரையிடப்படவிருந்த இந்தப் படம், அப்பகுதி பாஜக அமைப்பினரால் தடுக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அந்த திரையிடலைக் காணவிருந்த நிலையில் பாஜகவினர் அங்கு புகுந்து மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

அங்கு விரைந்த காவல்துறையினர் திரையிடலை ஒத்திக்வைக்குமாறும், கல்லூரிக்கு உள்ளே நடத்துமாறும் மாணவர்களைக்  கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் திரையிடல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், இன்று இரவு 7 மணிக்கு அந்த ஆவணப்படம் அதே இடத்தில் நடத்தப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், "ராம் கி நாம்' ஆவணப்படம் மாநிலத்தின் பல பகுதிகளில் திரையிடப்படும். கே ஆர் நாராயணன் தேசிய திரைக்கலை கல்லூரியின் முன்னும் திரையிடப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முகநூலில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com