ராமரை காண வந்த குரங்கு: அயோத்தியில் பரபரப்பு
ராமரை காண வந்த குரங்கு: அயோத்தியில் பரபரப்பு

ராமரை காண வந்த குரங்கு: அயோத்தியில் பரபரப்பு!

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் கருவறைக்குள் திடீரென ஒரு குரங்கு நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் கருவறைக்குள் திடீரென ஒரு குரங்கு நுழைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ஜன.22-ம் தேதி ஸ்ரீபால ராமரின் சிலை கோலாகலமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை விழாவைப் பிரதமர் மோடி தலைமையேற்று நடத்திவைத்தார். 

அயோத்தி ராமரை தரிசிக்க நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துவருவதையடுத்து, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று மாலை குரங்கு ஒன்று தெற்கு வாசல் வழியே திடீரென ராமர் கோயிலின் கருவறைக்குள் நுழைந்தது. ராமர் சிலையை நோக்கி முன்னேறிச் சென்றது. 

கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்கள், குரங்கை நோக்கி ஓடினர். ஆனால் எந்தவித பிரச்னையும் இன்றி குரங்கு வடக்கு வாசலை நோக்கிச் சென்றது. அதன் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் கிழக்கு வாசல் வழியாக வெளியேறியது.

ஸ்ரீபால ராமரை தரிசிக்க அனுமனே நேரில் வந்தது போன்று இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர். இந்த சம்பவம் அயோத்தி கோயிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com