வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை!

தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை!

தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாளும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் விடுமுறை என்றாலும், மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகளை மேற்கொள்வதால் பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது. 

கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் செலவை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com