மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மகளின் திருமணம்... விடியோ அழைப்பில் வாழ்த்திய பெற்றோர்!

அமெரிக்காவில் நடந்த மகளின் திருமணத்தை பெற்றோர்கள் விடியோ அழைப்பின் மூலம் கண்டு வாழ்த்தியது குறித்து...

telangana parents watched their daughter's wedding in the United States via video call

மகளின் திருமணத்தை விடியோவில் கண்டு வாழ்த்தும் பெற்றோர் - எக்ஸ்

Published On :

அமெரிக்காவில் நடந்த மகளின் திருமணத்தை பெற்றோர்கள் விடியோ அழைப்பின் மூலம் கண்டு வாழ்த்தினர்.

விசா பிரச்னையால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தங்கள் ஒரே மகளின் திருமணத்தை விடியோ அழைப்பில் பெற்றோர்கள் கண்டு நெகிழ்ந்தனர்.

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தின் வேபலசிங்காரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜு - ஜோதி தம்பதியின் ஒரே மகள் ஹிமாபிந்து அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

அங்கு தெலங்கானாவைச் சேர்ந்த ரோஹித் என்பவருடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் அமெரிக்காவிலேயே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனிடையே ஹிமாபிந்துவின் பெற்றோர் அமெரிக்காவுக்குச் செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

திருமண தேதி நெருங்கும் வேளையில் விசா வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டிருந்ததால், வேறு வழியின்றி மகளின் திருமணத்தை விடியோ அழைப்பின் மூலம் பெற்றோர்கள் கண்டு வாழ்த்தினர்.

முழு திருமண நிகழ்வும் அமெரிக்காவில் இருந்து விடியோ அழைப்பு மூலம் தெலங்கானாவின் கிராமத்தில் இருந்த பெற்றோருக்கு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. மணமகளின் பெற்றோருடன் கிராமத்தினரும் திருமணத்தை விடியோ அழைப்பிலேயே கண்டு வாழ்த்தினர்.

தங்கள் ஒரே மகளின் திருமணத்துக்குச் செல்ல முடியாத பெற்றோர் டிவியில் மகளின் திருமணத்தை கண்டு வாழ்த்தும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

telangana parents watched their daughter's wedding in the United States via video call

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.